நாள் குறித்த அயலான் படக்குழு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்தப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 'அயலான்' திரைப்படத்தின் டிரைலர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்தத் தகவலை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்க்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தங்களது வலைதள பக்கத்திலும் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ayalaan movie trailer date announce


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->