ஆர்யாவின் 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' படத்தின் ட்ரைலர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்யா விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் 2015இல் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், ஆர்யா நடிப்பில் நான் கடவுள், ஓரம் போ, பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசபட்டினம், சேட்டை, ராஜா ராணி, வேட்டை உள்ளிட்ட 25 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின.

இதன் மூலம் அவர் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்தார்.சமீபத்தில் அவர் ரஞ்சித் இயக்கத்தில் சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் பிரபல திரைப்பட நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஆர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் முத்தையா  இயக்கி வருகிறார்.

மேலும், இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதனை ட்ரம் ஸ்டிக் புரொடக்ஷன் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.இதனிடையே 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த மார்ச் 31ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ஜூன் மாதம் 2 ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆர்யா நடித்த உள்ள காதல் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arya in katharpatsha enkira muthuramalingam movie trailer release


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->