அர்ஜுன் தாஸுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிப்பு..! 
                                    
                                    
                                   Arjun Das has been announced as the best actor
 
                                 
                               
                                
                                      
                                            லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிக்கு அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். அதனை தொடர்ந்து, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்து சரிக்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
தற்போது, அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி 'படத்தில் இரட்டை வேடத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 இயக்குனர் சாந்தகுமார் இயக்கிய 'ரசவாதி' படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்திற்காக அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ ஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான விருதை 'ரசவாதி' திரைப்படம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                                     
                                 
                   
                       English Summary
                       Arjun Das has been announced as the best actor