"இப்படியா கலாய்ப்பாங்க"- "மல்லி பூ" மதுஸ்ரீக்கு தமிழ் லிங்க் அனுப்பிய ஏ. ஆர் ரகுமான்! - Seithipunal
Seithipunal


கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி  விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தத் திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற மல்லி பூ என்ற பாடல் கடந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றி பாடலாக அமைந்தது. இந்தப் பாடலை முனுமுனுக்காத வாய்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு பட்டித் தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் பாடல் ஆக அமைந்தது. இந்தப் பாடலின் காட்சி அமைப்பும் கூடுதல் பிளஸ் ஆக அமைந்தது.

இந்தப் பாடலில் ஏ ஆர் ரகுமானின் இசை சிம்புவின் நடனம் மற்றும் மதுஸ்ரீ குரல் என எல்லாமே சூப்பர் ஹிட்டாகி இந்தப் பாடல் பல விருதுகளை வென்று வருகிறது. இந்தப் பாடலை பாடிய மது ஸ்ரீ கொல்கத்தாவை சார்ந்தவர் சிறு வயது முதலே இசையின் மீதும் பாடல்கள் மீதும் ஆர்வமிருந்ததால் அவற்றை முறையாக கற்றுக் கொண்டிருக்கிறார். அலைபாயுதே திரைப்படத்தின் ஹிந்தி வெர்சனில் முதல் முதலில் தனது திரை பயணத்தை தொடங்கியவர்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு விருதுகள் வழங்கும் விழாவில் மல்லி பூ பாடலுக்கு  மூன்று விருதுகள் கிடைத்தன. அவற்றைப் பெற்றுக் கொண்ட பாடையும் மது ஸ்ரீ அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பதிவிற்கு அவரைப் பாராட்டியுள்ள இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்  விரைவில் தமிழ் மொழியை கற்றுக் கொள்வதற்கான லிங்க்கையும் இணைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ar rhmancongratuate madhu shree for winning 3 awards in vtk and send tamil link


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->