ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஏ.ஆர்.ரஹ்மான்! யாருக்கு தெரியுமா?  - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மீது பண மோசடி புகார் அளித்த இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினரிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், செப்டம்பர் 27ஆம் தேதி இசை நிகழ்ச்சிக்காக ரூ. 29.50 லட்சம் ஏ.ஆர். ரகுமான் முன்பணமாக பெற்றதாகவும் இசை நிகழ்ச்சி நடைபெறாததால் அதனை திருப்பித் தர மறுப்பதாகவும் இந்திய அறுவை சிகிச்சை சிகிச்சை நிபுணர்வுகள் சங்கத்தினர் புகார் அளித்தனர். 

இந்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது, சென்னையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் மாநாடு ஏற்பாடு செய்திருந்தனர். 

ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சிக்கு இந்த மாநாட்டில் ஏற்பாடு செய்து முன்பணமாக அவருக்கு ரூ. 29.50 லட்சம் கொடுத்துள்ளனர். 

ஆனால் சில காரணங்களால் மாநாடு ரத்து செய்யப்பட்டது. எனவே ரகுமானுக்கு முன் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கடிதம் அனுப்பினோம். 

அவரும் தேதியிட்ட காசோலை ஒன்றை வழங்கினார். ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்ப வந்துவிட்டது. 

ரகுமானிடம் நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு 5 ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை அவர் பணம் தரவில்லை. எனவே ரஹ்மான் மற்றும் அவரது செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுத்து தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு ரகுமான் தரப்பில் இழப்பீடு கேட்டு அவர்களின் வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், ஏ.ஆர். ரகுமான் மீது சாட்டப்பட்ட குற்றம் அவரின் நட்பெயருக்கும் உண்மைக்கு புறபாகவும் உள்ளது. எந்த விதத்திலும் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினருக்கு தொடர்பு ஒப்பந்தமும் இல்லாத நிலையில் இது போன்ற குற்றச்சாட்டை மலிவான விளம்பரத்திற்காக தெரிவித்துள்ளனர். 

இவர்கள் கொடுத்ததாக தெரிவித்த பணம் ஏ.ஆர். ரகுமான் பெறவில்லை. வேறொரு நபரிடம் பணத்தை கொடுத்து விட்டு ரகுமான் பெயரை தெரிவித்துள்ளனர். 

ரகுமானுக்கு அனுப்பிய நோட்டீசை இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் 3 நாட்களில் திரும்ப பெற வேண்டும். ரஹ்மான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். 

மேலும் அவரது நட்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக ரூ. 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AR Rahman sent notice asking compensation of Rs 10 crore 


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->