டி.டி.எஃப் வாசன் படத்தில் அனிருத்.! வெளியானது புது அப்டேட்!! - Seithipunal
Seithipunal


பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் இயக்குனர் செல்ஆம் இயக்கத்தில் "மஞ்சள் வீரன்" என பெயர் சூட்டப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். டி.டி.எஃப் வாசனின் பிறந்தநாளுக்கு மஞ்சள் வீரன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் முதல் கட்ட படவெடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

மஞ்சள் வீரன் திரைப்படத்தில் டிடிஎஃப் வாசனுக்கு ஜோடியாக பிரபல யூடியூபர் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியானது. 2K கிட்ஸ் மத்தியில் தனது நடிப்பு திறமையால் பிரபலமான க்யூட்டி ஸ்டார் அமலா ஷாஜி மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் அறிமுக பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மஞ்சள் வீரன் திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் அனிவி இசையில் உருவாக உள்ள டிடிஎஃப் வாசன் அறிமுகமாகும் பாடலை அனிருத் பாட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anirudh will sing debut song for TTFVaasan in Manjal Veeran


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->