எனது அப்பாவை சொல்லும்போது கோபம் வரும்: உணர்ச்சிவசபட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! - Seithipunal
Seithipunal


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். 

வருகின்ற பிப்ரவரி 9-ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 

இந்த விழாவில் பேசிய இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், என்னிடம் பல பேர் அப்பா, அம்மா குறித்து பேசுவார்கள். கதை குறித்து பேசினால் எப்படியாவது நடக்காமல் போய்விடும். சில சமயங்களில் நம்மிடம் பேசுவது அப்பா மீது உள்ள மரியாதைக்காக பேசுவார்கள். 

என் கதையை கேட்க எனது அப்பா மட்டுமே என்னிடம் பேசுவார். ரஜினியின் மகள் என்பதால் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. திறமை இருந்தால் ஜெயிக்க முடியும். 

சமூக வலைதளங்களில் அப்பாவை சங்கி சங்கி என அழைப்பது கோபம் வருகிறது. அவர் சங்கியாக இருந்தால் இந்த திரைப்படத்தில் நடித்திருக்க மாட்டார். ரஜினிகாந்த் ஒருவர் மட்டுமே இதில் நடிக்க முடியும் என உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aishwarya Rajinikanth Emotional speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->