அட.. கமல் நடித்த படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க ஆசைப்பட்டாரா.? அது எந்த படம்.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ரீமேக் படங்கள் எப்போதாவது தான் வெற்றி பெறும். அப்படி வெற்றி பெற்ற படங்களில் முக்கியமானவை நண்பன் மற்றும் பாபநாசம். நண்பன் திரைப்படம் ஹிந்தியில் அமீர்கான், மாதவன் ஆகியோரின் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். மோகன்லால் நடிப்பில் உருவான திருஷ்யம் என்ற த்ரில்லர் படத்தினை கமல்ஹாசன் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்.

ஜித்து ஜோசப் இயக்கிய இந்த திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. கௌதமி மற்றும் நிவேதா தாமஸ் ஆகியோர் கமல்ஹாசனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் தமிழ் ரஜினி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்தத் திரைப்படத்தினை சுரேஷ் பாலாஜி மற்றும் ராஜ்குமார் சேதுபதி ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். பாபநாசம் படத்தை பற்றி சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அந்த செய்தியில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை தொடர்பு கொண்ட சூப்பர் ஸ்டார் த்ரிஷ்யம் படத்தை பார்த்துவிட்டு அதை தமிழில் ரீமேக் செய்யலாம் என கூறி இருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கான உரிமைகளை தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி வாங்கி விட்டதாக    தானு சூப்பர் ஸ்டாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தான் பா. ரஞ்சித்தின் கபாலி கதையை சூப்பர் ஸ்டாரிடம் கூறியிருக்கிறார். அந்தக் கதை சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்துப் போகவே கபாலி படம் ஆரம்பமாகி இருக்கிறது. பாபநாசம் திரைப்படம் சூப்பர் ஸ்டார் நடிக்க ஆசைப்பட்டு முடியாமல் போய் இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After eight years the news came out that the superstar was unable to act in this film


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->