விஜய் டிவி பிரபலத்தின் திருமணத்தில் அதிதி சங்கர்.! உடல் எடை கூடிய புகைப்படத்தால் ஆச்சர்யம்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவுக்கு புது வரவாக அதிதி சங்கர் இருக்கிறார். இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி சங்கர் விருமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் டாக்டர் படித்தவர் படித்து முடித்துவிட்டு உடனே சினிமாவுக்கு வந்து விட்டார்.

அதிதி சங்கர் சிறுவயதில் இருந்து சினிமா, பாட்டு, டான்ஸ் என்று அனைத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். அத்துடன் இவர் விருமன் படத்தில் ஒரு பாடலை பாடியும் பாடகியாக தனது பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார். திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதிதி சங்கரின் ஒரு புகைப்படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் அவரை பிரபலமாக்கியது.

இவர் படப்பிடிப்பின்போது செய்த சேட்டைகளை கூட ஆடியோ வெளியீட்டு விழாவில் சூரி மற்றும் கார்த்தி இருவரும் கூறி அதிதி சங்கர் மீது ரசிகர்களின் விருப்பத்தை அதிகரித்தனர். சமீப காலமாகவே ஷங்கரின் சிறுவயது புகைப்படங்கள், அவரது பள்ளி மதிப்பெண்கள், அவருக்கு பிடித்த விஷயங்கள் என்று சமூக வலைதளங்களில் பல சுவாரசியமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது ஷங்கர் மற்றும் அவரது மனைவியுடன் சேர்ந்து அதிதி சங்கர் விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அதிதி சங்கர் கொஞ்சம் உடல் எடை கூடி காணப்படுகிறார். இது தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adithi Shankar In DD marriage


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->