போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரையுலகில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சாய் சுதா. இவருக்கு இந்த திரைப்படத்திற்கு பின்னர் பெரும் வரவேற்பு கிடைத்தது. 

இவர் கடந்த ஏழு வருடமாக ஷியாம் கே நாயுடு என்ற நபரை காதலித்து வந்த நிலையில், ஷியாம் தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபு நடித்த போக்கிரி, பிசினஸ் மென் போன்ற பல்வேறு படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், நடிகை சாய் சுதாவிடம் திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி வந்த நிலையில், திருமணம் செய்யாமல் தட்டிக்கழித்து வந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து சாய் சுதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பான புகாரை ஏற்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், ஷியாமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்ட நபர் ஆவார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Sai Sudha complaint Shiyam K Naidu about love cheats


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal