குழந்தை பிறந்ததால் நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.?  - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்களில் ஒருவர்தான் அஜித்குமார். இவரை ரசிகர்கள் தல என்று அன்போடு அழைப்பார்கள். ஆனால் கடந்த ஆண்டு தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என அஜித் குமார் கோரிக்கை வைத்தார்.

இவரது நடிப்பில் இறுதியாக வலிமை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாக இருக்கிறது. பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் படு பயங்கரமாக இருக்கிறது. 

ஏ கே 61 படம் குறித்த அறிவிப்பு வெளியான சில தினங்களில் ஏகே 62 படம் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. லைக்கா நிறுவனம் தயாரிக்கின்ற இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் அனிருத் இசையமைக்கிறார். இதன் சூட்டிங் வரும் டிசம்பர் மாதத்தில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

அடுத்த ஆண்டு ஆகஸ்டில் இந்த படம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இதில் ஏற்கனவே நயன்தாரா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது நயன்தாராவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதால் அதை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் இந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actress nayanthara may left from ajithkumar 62


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->