விரைவில் உருவாகும் பஞ்சதந்திரம் 2 திரைப்படம்.? வெளியான அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


உலக நாயகன் கமல்ஹாசனின் திரைப்படங்களில் மிக முக்கியமானது பஞ்சதந்திரம். இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் தற்போது வரை ரசிக்கப்படுகின்றன. இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, கமல்ஹாசன், நாகேஷ், ரமேஷ் கண்ணா, ஸ்ரீமன், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், சிம்ரன், ஊர்வசி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.

கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக வேண்டும் என்று அதில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் வற்புறுத்தி வருகின்றனர்.

அதன்படி ஸ்ரீமன் ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில், "என்னிடம் நிறைய பேர் பஞ்சதந்திரம் இரண்டாம் பாகம் வருமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். கமல்ஹாசன் முடிவு செய்தால் அது நடக்கும்" என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணனும் பஞ்சதந்திரம் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "கமல்ஹாசனுடன் எந்த வேடம் கொடுத்தாலும் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தில் பஞ்சதந்திரம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் முடிவடையவில்லை. எனவே பஞ்சதந்திரம் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என என்றும் எடுத்தால் நன்றாக இருக்கும்" என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actors wish make pamchathanthiram 2 movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->