விசிக-வை அவமானப்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளது - காவல் ஆணையரிடம் விசிக தரப்பில் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஞ்சித் தமிழகத்தில் சமூக அமைதியை சீர்குலைப்பதாக கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு என்பவர் புகார் அளித்துள்ளார்.

நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் படம் கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்ற இந்த திரைப்படத்திற்கு, சில எதிர்ப்புகளும் கிளம்பியது.

குறிப்பாக நடிகர் ரஞ்சித் ஆணவப்படுகொலை அளித்த விளக்கம் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. சில அவரின் கருத்து தவறாக புரிந்து கொல்லப்பட்டதாகவும் குரல் எழுப்பினர்.

"குழந்தைகளை பெற்று வளர்த்த பெற்றோருக்கு தான் தெரியும். இவை அனைத்தும் உணர்ச்சிவசப்பட்டு செய்வது தான்" என ரஞ்சித் அளித்த விளக்கம், ஆணவப்படுகொலை குற்றமில்லை என்று பரபரப்பப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக வன்னியரசு என்பவர் புகார் அளித்துள்ளார்.

அதில், ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்தில் திட்டமிட்டு விசிக-வை அவமானப்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளது.

இந்த படத்தில், ஆணவக் கொலைகளை நியாயப்படுத்தும் வகையில் ரஞ்சித் சில கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்துள்ளார். 

அவரின் கருத்து சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது. ரஞ்சித் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ActorRanjith VCK Vanniyarasu Kavundampalayam Tamil Cinema issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->