கங்குவா படம் - வீடியோ வெளியிட்ட நடிகர் சூர்யா.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. இயக்குனர் சிவா இயக்கம் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்க்கிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா, பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தன. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு நடிகர் சூர்யா, கங்குவா படத்தின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor surya vedio uplode about kanguva movie


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->