சூர்யாவின் குடும்பத்தை தொடர்ந்து, தனியொரு நபராக திரைத்துறை தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த பிரபல நடிகர்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 195 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 378,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,510 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. 

இந்தியா முழுவதிலும் கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு வருகிறது. 

இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ள நிலையில், கடந்த 19 தேதி முதல் திரைத்துறை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் பெப்சியில் உறுப்பினராக இருக்கும் நபர்களின் குடும்பம் பாதிக்கப்ட்டுள்ளதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருந்தார். இவர்களுக்கு உதவி செய்ய திரையுலகினர் முன்வரவும் கோரிக்கை வைத்தார். 

இதன் அடிப்படையில், நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்த்து ரூ.10 இலட்சம் நிதிஉதவி அளித்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் திரைத்துறை தொழிலாளர்களுக்காக ரூ.10 இலட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakarthikeyan announce fund for cinema workers


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal