திருமணம் முடித்த கையோடு சதீஷிக்கு அடித்த அதிஷ்டம்.! ஆனந்தத்தில் திகைக்கும் புதுமண தம்பதி.!!
actor sathish join thaliavar 168 th film
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல் அதிகாரியாக நடித்து வந்தார். இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில்., இப்படத்திற்கான முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மூன்றுமுகம் மற்றும் பாண்டியன் திரைப்படத்திற்கு பின்னர் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் திரைப்படம் என்பதால்., ரசிகர்கள் பெரும் எதிர்ப்ப்புடன் காத்திருக்கும் நிலையில்., இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்., நடிகை நயன்தாரா மற்றும் யோகிபாபு., தம்பி ராமையா போன்ற பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்த நிலையில்., இப்படத்தின் இசையமைப்பு பணியை அனிருத் மேற்கொண்டுள்ள நிலையில்., இப்படத்தின் தயாரிப்பு பணிகளை லைக்கா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில்., தர்பார் திரைப்படம் முடிவதற்கு முன்னதாகவே அடுத்தபடியாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இது குறித்த தகவல் வெளியானது போலவே சில நாட்களில் உறுதி செய்யப்பட்டு., ரஜினியின் 168 ஆவது திரைப்படத்தை சிவா இயக்குவது உறுதியான நிலையில்., இப்படத்தை சன் குழுமம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

இந்த திரைப்படத்தில் குஷ்பூ., மீனா., கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரகாஷ் ராஜ்., பரோட்டா சூரி ஆகியோர் நடிக்கவுள்ள நிலையில்., இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இவர்களுடன் தற்போது சதீஷ் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்., நடிகர் சதீஷிற்கு தற்போது திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., இது குறித்து சதீஷ் தெரிவித்த சமயத்தில்., அவருடன் நடிக்க வேண்டும் என்று 25 வருடமாக காத்திருந்தேன். எனது ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் சிவா., ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனிற்கு எனது நன்றி என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
actor sathish join thaliavar 168 th film