திடீரென இடிந்து விழுந்த மேடை - நொடியில் தப்பிய பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான பிரியங்கா மோகன் கடந்த 2021ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, நெல்சன் இயக்கிய 'டாக்டர்' படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, டான் படத்தில் நடித்தார். இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்தார். தற்போது, ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரதர் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கானாவில் ஷாப்பிங் மால் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது தீடீரென மேடை சரிந்ததால் அனைவரும் கீழே விழுந்துள்ளனர். உடனே அவர் அங்கிருந்த பாதுகாவலர்களால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பான பதிவு சமூக வலைதளத்தில் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகை பிரியங்கா மோகன் தனது எக்ஸ் வலைதளத்தில், "இன்று தொரூரில் நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் விபத்து ஏற்பட்டது. தற்போது நான் நலமாக இருக்கிறேன், சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். 

இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும். எனக்கு அனுப்பிய அன்பு மற்றும் அக்கறையின் அன்பான செய்திகளுக்கு அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor priyanga mohan injured for stage collapse


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->