வாட்டி எடுத்த வறுமை - பிரபல நடிகருக்கு வாய்ப்புக்கு கொடுத்த விஜய்.! - Seithipunal
Seithipunal


வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. நடிகர்கள் பிரபு தேவா, பிரஷாந்த், பிரேம்ஜி, லைலா, சிநேகா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மீனாட்சி செளத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிற நிலையில், இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகராக யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

அதாவது, நடிகர் விஜயுடன் கஞ்சா கருப்பு சுமார் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிக்க உள்ளார். இதற்கு முன்பு விஜயுடன் ‘சிவகாசி’, ‘அழகிய தமிழ்மகன்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தார். 

அதுமட்டுமல்லாமல், தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த அவர் தனது பணத்தை இழந்து பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கூட கட்டமுடியாமல் வறுமையில் வாடுவதாக முன்பு தெரிவித்தார். இந்த நிலையில் தான், அவர் மீண்டும் பழையபடி சினிமாவில் நடிக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kancha karuppu joined thalapathy 68 movie


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->