சிம்பு படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் கமல்ஹாசன்.. வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழில் சினிமாவின் பிரபல நடிகரான கமலஹாசன் தற்போது இயக்குனர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஒரு புறம் நடிப்பிலும், மறுபுறம் தயாரிப்பிலும் தீவிரமாக களமிறங்கியுள்ளார் கமல்ஹாசன். அந்த வகையில் நடிகர் சிம்பு நடிக்கும் 48 வது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு நடிக்கும் 48 வது படத்தில் கமல்ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்ட போது அவருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக சிம்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor kamalahasan guest role in STR48 movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->