தயாரிப்பு மேலாளரை இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகை.!
actor deepa married to product manager sai ganesh
தயாரிப்பு மேலாளரை இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகை.!
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அன்பே சிவம்', 'நாம் இருவர் நமக்கு இருவர்', 'பிரியமான தோழி' உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகை தீபா. இவருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து வரும் சாய் கணேஷ் என்பவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதில், நடிகை தீபாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். ஆனால், அந்தத் திருமண வாழ்க்கைச் சுமூகமாக அமையாததால் முறைப்படி விவாகரத்து பெற்று விட்டார். அதனால், தீபாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதால் இந்தத் திருமணத்தை சாய் கணேஷின் வீட்டில் ஏற்கவில்லை.
பலத்த எதிர்ப்பும், மிரட்டலுக்கும் மத்தியில், இந்த ஜோடி தங்களது திருமணத்தை பதிவுத் திருமணமாக மிக எளிமையான முறையில் செய்து கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும், இருவருக்குமான ரகசியத் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நடந்து விட்டதாகவும், சாய் கணேஷின் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்ததால் இதுவரை வெளியுலகத்துக்கு தகவல் சொல்லாமல் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை தீபாவின் இந்த இரண்டாவது திருமணம் சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், இருபக்கம் அவருக்கு இந்த வாழ்க்கையாவது நன்றாக அமைய வேண்டும் என்று பலரும் வாழ்த்துகிறார்கள்.
English Summary
actor deepa married to product manager sai ganesh