தமிழ் சினிமா வரலாற்றில் 768 நாட்கள் ஓடி சாதனை; 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே தமிழ் படம் எது தெரியுமா? - Seithipunal
Seithipunal


இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் ஒரு வாரம் திரையரங்கில் ஓடினாலே அது பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது. டிஜிட்டல் தளங்கள், ஓடிடி வெளியீடுகள், பல மொழி வெளியீடுகள் என தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில், ஒரு படம் நீண்ட நாட்கள் திரையரங்கில் நிலைத்து நிற்பது சவாலாகி விட்டது. ஆனால், தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படம் மட்டும் மூன்று தீபாவளிகளை கடந்தும் கிட்டத்தட்ட 768 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது.

அந்தப் படம் அஜித், விஜய், ரஜினி, கமல் ஹாசன் அல்லது எம்ஜிஆர், சிவாஜி போன்ற பிரபலங்களின் படம் அல்ல. 1944ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி வெளியான தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ்’ தான் அந்த வரலாற்றுச் சாதனையை படைத்த திரைப்படம். இயக்குநர் சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கிய இந்த படம், அந்நாளைய பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது.

இந்தப் படத்தில் தியாகராஜ பாகவதருடன் என்.எஸ். கிருஷ்ணன், பி.வி. ரங்காச்சாரி, டி.ஆர். ராஜகுமாரி, என்.சி. வசந்தகோகிலம், டி.ஏ. மதுரம், ராதாபாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கதைக்களம் குடும்ப உணர்வுகளையும், மானுட பலவீனங்களையும் மையப்படுத்தியது.

பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஹரிதாஸ், மனைவியின் மீதான பாசத்தில் மூழ்கி பெற்றோரைக் கூட புறக்கணிக்கும் நிலைக்கு செல்வார். பின்னர் ஒரு நடன மங்கையின் அழகிலும் கவர்ச்சியிலும் மயங்கி அவளையே நம்பும் நிலை உருவாகிறது. சூழ்ச்சியால் உண்மைகள் மறைக்கப்பட்டு, பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். இறுதியில் உண்மை வெளிச்சத்திற்கு வந்து, தெய்வ அருளால் தவறை உணர்ந்து பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு குடும்பம் மீண்டும் ஒன்று சேரும் விதமாக கதை நகர்கிறது.

அருமையான கதையமைப்பு, இசை மற்றும் தியாகராஜ பாகவதரின் நடிப்பு ஆகியவை இந்தப் படத்தை மக்களின் மனதில் நிலைத்திருக்கச் செய்தன. 1944ஆம் ஆண்டு சென்னை பிராட்வே திரையரங்கில் வெளியான ‘ஹரிதாஸ்’, தொடர்ந்து 768 நாட்கள் ஓடி, மூன்று தீபாவளிகளை கடந்தும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது.

இன்றுவரை அந்த வசூல் சாதனையை எந்தப் படமும் முறியடிக்கவில்லை என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. அந்நாளைய வசூல் விவரங்கள் முழுமையாக பதிவாகவில்லை என்றாலும், ‘ஹரிதாஸ்’ தமிழ் சினிமா வரலாற்றில் நீண்ட நாள் ஓடிய படமாக தனித்த அடையாளம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A record in the history of Tamil cinema that ran for 768 days Do you know which is the only Tamil film that saw 3 Diwalis


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->