அலறலில் பெண்கள்!மீண்டும் மீண்டும் பயப்புடுத்தும் தங்கம் விலை...!
Women in a panic Gold prices are once again frightening
கடந்த சில தினங்களாக, தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது.இதில் பெரும்பாலும் விலை உயர்ந்தே பார்க்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9,130-க்கும், ஒரு சவரன் ரூ.73040-க்கும் விற்பனையானது.

இதன்பின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையானது.இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையாகிறது.
இரு தினங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.119 க்கும் பார் வெள்ளி ரூ. 1,19,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை:
11-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
10-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,640
08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
கடைசி 5 நாள் வெள்ளி விலை :
11-06-2025- ஒரு கிராம் ரூ.119
10-06-2025- ஒரு கிராம் ரூ.119
09-06-2025- ஒரு கிராம் ரூ.118
08-06-2025- ஒரு கிராம் ரூ.117
07-06-2025- ஒரு கிராம் ரூ.117
English Summary
Women in a panic Gold prices are once again frightening