எகுறும் தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
What is the current gold price
தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் நீடிக்கிறது. கடந்த 11-ந்தேதியிலிருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 13-ந்தேதி ஒரு சவரன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது.
இதையடுத்து கடந்த 16, 17-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் விலை அதிகரித்து காணப்பட்டது.இதில் நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9250-க்கும், ஒரு சவரன் ரூ.74000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதன் மூலம் மீண்டும் ஒரு சவரன் ரூ.74000 -தை தொட்டது.இந்நிலையில், தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. இதில் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,265-க்கும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,120-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. இது ஒரு கிராம் வெள்ளி ரூ.122 க்கும் கிலோவுக்கு 2000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,22,000க்கும் விற்பனையாகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
18-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,000
17-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,600
16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440
15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
கடைசி 5நாள் வெள்ளி விலை நிலவரம்:
18-06-2025- ஒரு கிராம் ரூ.122
17-06-2025- ஒரு கிராம் ரூ.120
16-06-2025- ஒரு கிராம் ரூ.120
15-06-2025- ஒரு கிராம் ரூ.120
14-06-2025- ஒரு கிராம் ரூ.120
English Summary
What is the current gold price