சென்னையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு உயர்வு.! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்து வரக்கூடிய தக்காளியின் வர்த்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 30 சதவிகிதம் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் கூடுதல் விலைக்கு தக்காளி விற்கப்படுகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் சில்லறை விலையில் ரூ.80 முதல் ரூ.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழையால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் மீண்டும் தக்காளி பயிரிடாததால் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomato price hike in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->