திடீரென உயர்ந்த சின்ன வெங்காயம் விலை - கிலோ எவ்வளவு தெரியுமா?
small onion price increase
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்து ரூ100-ஐ தாண்டியுள்ளது. இதன் விலை வரும் நாட்களிலும் குறைவதற்கான வாய்ப்பு இல்லாததால், அதன் விலையேற்றம் மற்ற காய்கறிகளின் விலையிலும் எதிரொலிக்கக்கூடும்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ110 என்று உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக மக்கள் பெரிய வெங்காயம் பக்கம் திரும்பியதில் அதன் விலையும் அதிகரித்துள்ளது.
சின்ன வெங்காயத்தின் விலை வரத்து குறைவு மற்றும் பருவ மழை காரணமாக எழும் இடையூறுகள் போன்றவற்றால் தொடர்ந்து உயர்வதற்கு வாய்ப்புள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு நாட்டையே உலுக்கியது.
அப்போது தக்காளியுடன் சேர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் ஏறியது. ஆனால், தற்போது தக்காளி விலை தரைக்கு இறங்கிய பிறகும், வெங்காயம் மட்டும் தனியாக விலையேறி வருகிறது. குறைபட்ச விலையாக பல்வேறு ஊர்களிலும் சர்வ சாதாரணமாக சின்ன வெங்காயம் சதமடித்துள்ளது.
English Summary
small onion price increase