யுபிஐ பண பரிவர்த்தனைக்கு எந்த கட்டணமும் கிடையாது! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பேடிஎம் நிறுவனம்! - Seithipunal
Seithipunal



வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 2000க்கும் மேற்பட்ட யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

வெளியாகிய அந்த தகவலின் படி எரிபொருளுக்கு 0.5% கட்டணமாகவும், தொலைதொடர்பு, கல்வி, அஞ்சல், விவசாயம், பல்பொருள் அங்காடிகள் பண பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதம் கட்டண வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காப்பீடு, ரயில்வேக்கான பரிவர்த்தனைகளுக்கு ஒரு சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தேசியப் பண பரிவர்த்தனை கழகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், யுபிஐ பரிவர்த்தனை, வேலட் பேமெண்ட்-க்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை என்று பேடிஎம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், "பரிமாற்றக் கட்டணங்கள் மற்றும் வாலட் இயங்குதன்மை பற்றிய NPCI சுற்றறிக்கையைப் பொறுத்தவரை, எந்த வாடிக்கையாளரும் வங்கிக் கணக்கு அல்லது PPI/Paytm Wallet இல் இருந்து #UPI இலிருந்து பணம் செலுத்துவதற்கு எந்தக் கட்டணத்தையும் செலுத்த மாட்டார்கள். தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்" என்று பேடிஎம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PAY TM Announce UPI NCPI


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->