மாருதி சுசுகி கிராண்டு விட்டாரா: ஃபுல் டேங்கில் அதிக கி.மீ தரும் மாருதி கிராண்ட் விட்டாரா!விற்பனையில் வளர்ச்சி – வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு!
Maruti Suzuki Grand Vitara Maruti Grand Vitara gives more km on a full tank Growth in sales welcome by customers
இந்திய சந்தையில் பிரபலமான கார் நிறுவனமான மாருதி சுசுகி, தனது கிராண்டு விட்டாரா ஹைப்ரிட் SUV மாடலின் மூலம் மேலும் ஒரு சாதனையை பதிவு செய்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 7,154 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட இந்த வாகனம், ஹைப்ரிட் கார்களின் வரிசையில் மிக அதிகம் விற்பனையான மாடலாக இருந்து வருகிறது.
விற்பனையில் வளர்ச்சி
மாருதி சுசுகி கிராண்டு விட்டாராவுக்கு கடந்த மாதம் கிடைத்த விற்பனை வளர்ச்சி, வாடிக்கையாளர்களிடையே அதன் நிலையான வரவேற்பை காட்டுகிறது. வெறும் மைலேஜ் மட்டுமல்லாமல், பாதுகாப்பு அம்சங்களும், டெக் வசதிகளும், அதன் வெற்றிக்கு காரணமாக உள்ளன.
அதிரடி மைலேஜ் – 1200 கிமீ வரை பயணம்
இந்த ஹைப்ரிட் காரின் மிகப்பெரிய பலம் அதன் மைலேஜ். ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலில் 45 லிட்டர் எரிபொருள் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு முறை டேங்க் நிரப்பினால், 27.97 கி.மீ/லிட்டர் மைலேஜுடன், சுமார் 1200 கி.மீ வரை பயணம் செய்ய முடியும். இது டெளளி-மும்பை அல்லது சென்னை-பாண்டிச்சேரி வரை இரண்டு முறை வரும் தூரம்.
பாதுகாப்பில் மேம்பாடு
மாருதி சுசுகி, தற்போது கிராண்டு விட்டாராவின் அனைத்து வேரியண்ட்களிலும் ஆறு ஏர்பேக்குகள் வழங்கி பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியுள்ளது. மேலும், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ABS, EBD, முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள், ISOFIX குழந்தை சீட் ஆங்கர்கள் போன்றவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய டெல்டா+ ஹைப்ரிட் வேரியண்ட்
கிராண்டு விட்டாராவின் ஹைப்ரிட் வரிசையில் தற்போது டெல்டா+ ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள ஜீட்டா பிளஸ் மற்றும் ஆல்ஃபா பிளஸ் ஹைப்ரிட் மாடல்களுக்கு இடையே ஒரு ஸ்மார்ட் விருப்பமாக இருக்கிறது. இந்த வேரியண்டில், பெட்ரோல் எஞ்சினுடன் இணைக்கப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.
விலையும் வசதிகளும்
மாருதி கிராண்டு விட்டாராவின் ஆரம்ப விலை ரூ.11.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். புதிய வேரியண்ட்களுடன், வாடிக்கையாளர்களுக்கு விருப்பங்களுக்கு ஏற்ப பல தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
உள்ளமைப்பில் ஸ்மார்ட் அம்சங்கள்
2025 மாடலில், எட்டு வழி பவர்டு டிரைவர் சீட், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (6AT வேரியண்ட்களுக்குள்), மற்றும் PM2.5 ஏர் பியூரிஃபையர் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மாருதி சுசுகி கிராண்டு விட்டாரா, இந்திய ஹைப்ரிட் SUV சந்தையில் ஒரு வலுவான போட்டியாளராக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது. மைலேஜ், பாதுகாப்பு, மற்றும் புதிய டெக் அம்சங்களை ஒருங்கிணைத்து, இது நவீன வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.
English Summary
Maruti Suzuki Grand Vitara Maruti Grand Vitara gives more km on a full tank Growth in sales welcome by customers