பிஎம்டபிள்யூ X4 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்! - Seithipunal
Seithipunal


பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது X4 மாடலின் 50 ஜாரெ எம் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

விலை விவரங்கள்:

புதிய பிஎம்டபிள்யூ X4 ஜாரெ எம் எடிஷன் மாடல் விலை - ரூ. 72 லட்சத்து 90 ஆயிரம்  எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

புதிய பிஎம்டபிள்யூ X4 30d 50 ஜாரெ எம் எடிஷன் மாடல் விலை ரூ. 74 லட்சத்து 90 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

* ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பெரிய கிட்னி கிரில் மற்றும் கிளாஸ் பிளாக் பினிஷ் வழங்கப்பட்டுள்ளது.

* இதன் முன்புறம் மற்றும் பின்புறம் M லோகோ இடம்பெற்றுள்ளது.

* மேலும், M ஏரோடைனமிக் பேக்கேஜ் வழங்கப்பட்டுள்ளது. இது பாடி கலர் அப்ரான் மற்றும் சைடு சில்களை வழங்குகிறது.

* இத்துடன், 20 இன்ச் ஜெட் பிளாக் அலாய் வீல்கள் மற்றும் M ஸ்போர்ட் பிரேக் கேலிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

* காரின் உள்புறம் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ஸ்போர்ட்ஸ் சீட்கள் மற்றும் மெமரி ஃபன்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

* இதில், ரியர் இருக்கைகளில் ரிக்லைன் வசதி மற்றும் லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது.

* மேலும், M ஹெட்லைனர், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

* இந்த புதிய மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது.

* இந்த என்ஜின்கள் முறையே 251 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 261 ஹெச்பி பவர், 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Introducing the BMW X4 Special Edition


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->