தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி., வெளியான அதிரடி உத்தரவு.! கொண்டாட்டத்தில் குடிமகன்கள்.!
illegal liquor price hike issue
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பானங்களை அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு அதன் மேலாண்மை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று டாஸ்மாக் நிர்வாகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகளை அதன் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் பிறப்பித்துள்ளார். அதன்படி,
* தமிழகம் முழுவதும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வருகிறது. புகார்கள் மீது உடனடியாக மாவட்ட மேலாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மாவட்ட மேலாளர்கள் மீதும் அதிகளவில் முறைகேடு புகார்கள் வருகிறது. அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
* தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கிடங்குகள் மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளில் 90 நாட்களை கடந்த மது வகைகளை ஸ்டாக் வைத்து இருக்க கூடாது. ஸ்டாக் உள்ள மதுபானங்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும்.
* டாஸ்மாக் கடைகளை திறந்தவுடன் மேற்பார்வையாளர் உள்பட பணியில் யார் இருக்கிறார்கள் என்பதை புகைப்படம் எடுத்து, தலைமை அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு மாவட்ட மேலாளர்கள் அனுப்ப வேண்டும்.

* டாஸ்மாக் கடையின் உள் வெளியாட்கள் இருக்க கூடாது. அதனை அனுமதிக்கவும் கூடாது.
* ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் அனுமதியின்றி யாருக்கும் இடமாறுதல் உத்தரவு வழங்க கூடாது.
English Summary
illegal liquor price hike issue