தங்கம் மீண்டும் மின்னல் வேகம்...! முதலீட்டாளர்களை மிரள வைத்த புதிய சாதனை...!
Gold soaring again lightning speed new record that stunned investors
கடந்த மாதம் (டிசம்பர்) 15-ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து சில நாட்கள் விலை சரிவை சந்தித்த தங்கம், டிசம்பர் 22-ஆம் தேதியிலிருந்து மீண்டும் ஏறுமுகப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. கடந்த மாதம் 28-ஆம் தேதி புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம், பின்னர் திடீரென வீழ்ச்சியடைந்தது. அந்த சரிவுக்குப் பிறகு, கடந்த ஒரு வாரமாக மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் தங்கம் விலையில் லேசான உயர்வு காணப்பட்டது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,280-க்கு விற்பனை ஆனது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் மேலேறியது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4,000 உயர்ந்து ரூ.3,10,000-க்கும், ஒரு கிராம் ரூ.4 அதிகரித்து ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை – புதிய உச்சம்!
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.170 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,450-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலையும் விறுவிறுப்பு!
தங்கத்தின் ஏற்றத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 அதிகரித்து ரூ.3,18,000-க்கும், ஒரு கிராம் ரூ.8 உயர்ந்து ரூ.318-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களின் தங்கம் – வெள்ளி விலை நிலவரம்:
தேதி 1 கிராம் தங்கம் 1 சவரன் தங்கம் 1 கிலோ வெள்ளி 1 கிராம் வெள்ளி
19.01.2026 ரூ.13,450 ரூ.1,07,600 ரூ.3,18,000 ரூ.318
18.01.2026 ரூ.13,280 ரூ.1,06,240 ரூ.3,10,000 ரூ.310
17.01.2026 ரூ.13,280 ரூ.1,06,240 ரூ.3,10,000 ரூ.310
16.01.2026 ரூ.13,230 ரூ.1,05,840 ரூ.3,06,000 ரூ.306
15.01.2026 ரூ.13,290 ரூ.1,06,320 ரூ.3,10,000 ரூ.310
English Summary
Gold soaring again lightning speed new record that stunned investors