தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரு நாளிலேயே சவரனுக்கு ரூ.880 குறைந்து முதலீட்டாளர்கள் பதட்டம்!
Gold prices plunge sharply Investors nervous sovereigns drop by 880 single day
தங்கத்தின் விலை, கடந்த சில வாரங்களாக ரோலர் கோஸ்டரைப் போல ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி பயணித்து வருகிறது. முதலீட்டாளர்கள் ஒரு நாள் தங்கத்தையே நம்பிக் குவியும் நிலை, மறுநாள் பங்கு சந்தை சலசலப்பில் பாயும் நிலை, இந்த இருமனப்பான்மை போக்கே தங்க விலையில் இடைவிடாத அதிர்வுகளை உருவாக்கி வருகிறது.கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ.97,600 என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது.

ஆனால் அதே மாதம் 28-ஆம் தேதியன்று, அதே தங்கம் சவரனுக்கு ரூ.88,600 என்ற அளவுக்கு நேரடியாக சரிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.அதன்பிறகும் தங்க விலை நிலைமை சீராகாமல், சில தினங்கள் ஏறி, சில தினங்கள் தாறுமாறாக இறங்கும் வகையில் அலைபோல மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த மாதம் 13-ஆம் தேதி மீண்டும் விலை உயர்ந்து, சவரனுக்கு ரூ.95,000-ஐ கடந்தது. ஆனால் அதுவும் சில நாட்களே நீடித்தது; பின்னர் தங்க விலை மீண்டும் சரிவை சந்தித்தது.
நேற்று முன்தினம் விலை மீண்டும் பாய்ந்து, கிராமுக்கு ரூ.170, சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து,
ஒரு கிராம் -ரூ.11,630
ஒரு சவரன் - ரூ.93,040
என்று விற்பனையாகியது.
ஆனால் இன்று திருப்பமாக, தங்கம் விலை திடீரென கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று:
சவரனுக்கு ரூ.880 குறைந்து - ரூ.92,160
கிராமுக்கு ரூ.110 குறைந்து - ரூ.11,520
என்று விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
இதனுடன், வெள்ளியும் விலைச் சரிவில் இணைந்துள்ளது.
கிராமுக்கு ரூ.1 குறைந்து - ரூ.171
ஒரு கிலோ ரூ.1,000 குறைந்து - ரூ.1,71,000
என விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
Gold prices plunge sharply Investors nervous sovereigns drop by 880 single day