அதிரடியாக உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை.! - Seithipunal
Seithipunal


வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி, ரூ. 965.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 268.50 உயர்ந்து ரூ. 2,406க்கு விற்பனை செய்யப்படுகிறது.

19 கிலோ எடையுள்ள வணிகப்பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை கடந்த மாதம் 2137.50 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ரூ.268.50 உயர்ந்து, ரூ.  2,406 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gas price 268 5 increase


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->