சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் ஹோட்டல் உரிமையாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது.  கச்சா எண்ணெய் விலை உயரும் போது சமையல் எரிவாயு விலை உயர்வது வழக்கம்.

வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. எரிவாயு சிலிண்டர் என்பது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் இரண்டு வகையாக உள்ளது. 

கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ. 268 அதிகரித்தது. இதன்மூலம் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.2133-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 101 அதிகரித்து, ரூ. 2235.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 350 ரூபாய் அதிகரித்துள்ளதால் ஹோட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gas price 101 increase


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->