மத்திய அரசு வயிற்றில் அடிப்பது போதாதா, நீங்களும் சேர்ந்து அடிக்கிறிங்களே! மாநில அரசுக்கு முத்தரசன் கண்டனம்!   - Seithipunal
Seithipunal


மத்திய அரசு பின்பற்றும் மக்கள் விரோத பொருளாதார கொள்கையின் காரணமாக மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசின் கொள்கைகள் காரணமாக மோட்டார் வாகன தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் தொடர்ந்து மூடப்பட்டு லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.

விலைவாசியை கட்டுப்படுத்திட உறுதியான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத காரணத்தால் விலைவாசி உயர்ந்து கொண்டே உள்ளது. வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு உள்ளிட்ட பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. அண்மையில் சமையல் எரிவாயு விலை திடீர் என ரூ.13.50 உயர்த்தப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் வரை கட்டுக்குள் வைக்கப்பட்ட பெட்ரோல் - டீசல் விலை தேர்தல் முடிவிற்கு பின்னர் தினந்தோறும் பவுன் விலைபோல் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. இதன் விளைவாக அத்தியாவசிய பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் போட்டி போட்டு உயர்ந்து கொண்டே உள்ளது. 

பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை என்ற பெயரால் ஒரு லிட்டர் பால், எருமை - பசும்பால் என்று வேறுபாடு இன்றி லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி பொது மக்களை அரசு வஞ்சித்தது. 

இத்தகைய நெருக்கடிகளை மத்திய-மாநில ஆகிய இரு அரசுகளும் மக்களுக்கு தொடர்ந்து நெருக்கடியை கொடுப்பது போதாது என்று, தற்போது தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியதாகும்.
கட்டண உயர்வு குறித்து மின்வாரியம் இணைய தளத்தில் வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
எல்.டி.சர்விஸ் (தாழ்வு அழுத்த மின்இணைப்பு) வீடுகளுக்கு சிங்கில் பேஸ் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் ரூ.250 என்பது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

3 பேஸ் இணைப்பு கட்டணம் ரூ.500 என்பது ரூ.750 முதல் ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பொது குடிநீர் இணைப்பு, பொது பயன்பாட்டிற்கான விளக்குகளுக்கு ரூ.250 என்பது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பிரிவில் 3 பேஸ் இணைப்பிற்கு ரூ.500 என்பது ரூ.750 முதல் ரூ.1000 உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தளங்கள், கைத்தறி மற்றும் தொழில்களுக்கான கட்டணங்களும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. 

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கட்டணம் ரூ.500 முதல் ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளன. குடிசை தொழில், விசைத்தறி தொழிற்சாலை என அனைத்தின் மின் கட்டணங்களும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு மேலும் மேலும் சுமையை அதிகரிக்கும் மின்கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது" என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPI Mutharasan Condemns for electricity connection bill


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->