ஆக்டிவாவை விட கம்மி விலை! அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் சிறந்த 5 பைக்குகள் – முழு பட்டியல் இதோ!
Cheaper than Activa Top 5 bikes in India that give high mileage here is the full list
இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஹோண்டா ஆக்டிவா இன்னும் முதன்மையான ஸ்கூட்டராக இருந்தாலும், தினசரி நீண்ட தூரம் பயணிப்பவர்கள் அதிக மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு காரணமாக ஸ்கூட்டர்களை விட பைக்குகளையே அதிகமாகத் தேர்வு செய்து வருகிறார்கள். குறிப்பாக இன்ஜின் செயல்திறன், மைலேஜ் மற்றும் விலை நன்மைகள் காரணமாக 100cc–110cc சேக்மெண்ட் பைக்குகள் தற்போது மீண்டும் பிரபலமடைந்துள்ளன.
இந்த நிலையில் ஆக்டிவாவுக்கு மாற்றாக அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பட்ஜெட் பைக்குகளின் பட்டியல் பின்வருமாறு:
1. பஜாஜ் பிளாட்டினா 100
2. TVS ரேடியன்
3. ஹோண்டா ஷைன் 100
4. ஹீரோ HF டீலக்ஸ்
5. TVS ஸ்போர்ட்
இந்த ஐந்து பைக்குகளும் அதிக மைலேஜ், குறைந்த பராமரிப்பு மற்றும் மலிவு விலை வசதிகளால் ஆக்டிவாவுக்கு சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன. தினமும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் குறிப்பாக பைக்குகளை அதிகம் தேர்வு செய்யத் தொடங்கியிருப்பது ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
English Summary
Cheaper than Activa Top 5 bikes in India that give high mileage here is the full list