ஒரு கோடி அப்பே., பிஎம்டபிள்யூ X7 40i ஜாரெ M எடிஷன்.!  - Seithipunal
Seithipunal


பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் X7 40i ஜாரெ M எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை விவரங்கள்;

புதிய பிஎம்டபிள்யூ X7 ஸ்பெஷல் எடிஷன் காரின் விலை - ரூ. 1 கோடியே 20 லட்சம் என எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் சிறப்பு அம்சங்கள்:

* இந்த ஸ்பெஷல் எடிஷன் காரில் பெரிய கிட்னி கிரில் மற்றும் கிளாஸ் பிளாக் பினிஷ் வழங்கப்பட்டுள்ளது.

* இத்துடன், முன்புறம் மற்றும் பின்புறம் M சின்னம் இடம்பெற்றுள்ளது. 

* இந்த கார் மினரல் வைட் மற்றும் கார்பன் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. 

* இந்த புதிய X7 மாடலில் 21 இன்ச் ஜெட் பிளாக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.

* மேலும், இந்த மாடலில் M அக்சஸரீஸ் பேக்கேஜ் வழங்கப்பட்டுள்ளது. 

* பிஎம்டபிள்யூ X7 40i 50 ஜாரெ M எடிஷன் மாடலில் 3.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

* இந்த என்ஜின் 340 ஹெச்பி பவர் மற்றும் 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 

* இந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை 6.1 நொடிகளில் எட்டிவிடும். 

* இதனுடன், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. 

* மேலும், எபிஷியண்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் பிளஸ் என மூன்று விதமான டிரைவ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.

* இதன் மூலம் கார் என்ஜினின் சேசிஸ், ஸ்டீரிங் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவைகளின் செயல்திறன்கள் ஆல்டர் செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BMW X7


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->