பிஎம்டபிள்யூ புதிய 2022 R 1250 RT டூரிங் பைக் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?! - Seithipunal
Seithipunal


பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் புதிய 2022 R 1250 RT டூரிங் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

விலை விபரங்கள்:

இந்த புதிய மாடலின் விலை - ரூ. 23 லட்சத்து 95 ஆயிரம் என எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இந்த புதிய மாடலில் சிறப்பான ஏரோடைனமிக் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. 

• ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டூரிங்கிற்கு ஏற்ற உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

• லக்கேஜ் ராக், பேனியர் கேஸ்கள், ஹீடெட் க்ரிப் மற்றும் சீட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. 

• மேலும் கிளட்ச், பிரேக் மற்றும் கியர் லீவர் உள்ளிட்டவைகளை அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், ஸ்டீரிங் ஸ்டேபிலைசர் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளன.

• இத்துடன் ஹில் ஹோல்டு கண்ட்ரோல் மற்றும் பல்வேறு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

• இந்த மாடலில் 1254சிசி, பாக்சர் ட்வின், லிக்விட் கூல்டு DOHC என்ஜின் மற்றும் பிஎம்டபிள்யூ ஷிப்ட்கேம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த என்ஜின் 132.2 ஹெச்பி பவர் மற்றும் 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 

• அலுமினியம் கேஸ்ட் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BMW Launches New 2022 R 1250 RT Touring Bike


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->