பிஎம்டபிள்யூ G 310 RR மோட்டார்சைக்கிளின் வினியோகம் துவக்கம்! - Seithipunal
Seithipunal


பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய G 310 RR மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து, பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது இதன் வினியோகத்தை இந்திய சந்தையில் துவங்கி உள்ளது.

விலை விபரங்கள்:

புதிய G 310 RR மோட்டார்சைக்கிள் மாடலின் விலை - ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் என துவங்குகிறது.

பிரீமியம் ஸ்டைல் ஸ்போர்ட் ரேசிங் புளூ மெட்டாலிக் மாடலின் விலை - ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம்

பிரீமியம் ஸ்டைல் ஸ்போர்ட் ரேசிங் ரெட்  மாடலின் விலை - ரூ மற்றும் ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்டைல் ஸ்போர்ட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

• இதன் ஸ்டாண்டர்டு பெயிண்ட் ஆப்ஷனில் பிளாக் ஸ்டாம் மெட்டாலிக் ஷேட் கொண்டிருக்கிறது.  

இதன் அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் உபகரணங்கள் உள்ளிட்டவை இரு மாடல்களிலும் ஒரே மாதிரியே வழங்கப்பட்டுள்ளது.

• பிஎம்டபிள்யூ G 310 RR மோட்டார்சைக்கிளில் ஃபுல் எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

• மேலும், 5 இன்ச் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் ரைடு பை வயர் திராட்டில் வழங்கப்பட்டுள்ளது.

• நான்கு வித ரைடிங் மோட்கள், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ரியர் வீல் லிப்ட் ஆப் ப்ரோடெக்‌ஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

• இந்த மாடலில் 313சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

• இந்த என்ஜின் டிராக் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட்களில் 33.5 ஹெச்பி பவர் கொண்டுள்ளது.

• மேலும், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

• ரெயின் மற்றும் அர்பன் மோட்களில் செயல்திறன் 25.4 ஹெச்பி பவர் மற்றும் 25 நியூட்டன் மீட்டர் டார்க் என குறைந்து விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BMW G 310 RR motorcycle model Delivery launch


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->