புனே : இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்களான கஸ்பா பெத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்தா திலக் மற்றும் சின்ஞ்வாட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லஷ்மண் ஜக்தாப் உள்ளிட்டோர் சமீபத்தில் மரணமடைந்தனர். 

இதனால், அந்த இரு தொகுதிகளும் காலித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 26-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி, பாஜக இந்த தேர்தலில் போட்டியிட தீவிரமாக தயாராகி வருகிறது. 

இந்நிலையில், இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, சின்ஞ்வாட் தொகுதியில் மறைந்த லஷ்மண் ஜக்தாப்பின் மனைவி அஷ்வினி ஜக்தாப்பும், கஸ்பா பெத் தொகுதியில் ஹேமந்த் ரசானேவும் களம் இறக்கப்பட உள்ளார். 

இந்தத் தேர்தலில், சாதனை வெற்றி ஹேமந்த் ரசானே பெயர் பாஜக கட்சியால் அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்களும், பாஜக தொண்டர்களும் நகரில் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, ஹேமந்த் ரசானே ஸ்ரீமந்த் தக்துசேத் ஹால்வாய் கணபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- "இடைத்தேர்தல் நடக்கும் இரண்டு தொகுதிகளிலும் போட்டியில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக முயற்சி செய்தார். 

ஆனால், இந்தத் தேர்தலில் மற்ற கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், இந்த இடைத்தேர்தலில் பாஜக சாதனை ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று நான் உறுதி அளிக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp announce candidates for election in pune


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->