விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு..பயணிகள் அதிர்ச்சி!
Airfares hiked manifold Passengers are shocked
சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் இந்த முடிவை விமான நிறுவனங்கள் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூர் ஆகிய உள்நாட்டு விமான கட்டணங்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, விமான கட்டணங்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.சென்னை- தூத்துக்குடி இடையே வழக்கமான கட்டணம் ரூ.4,796, தற்போதைய கட்டணம் ரூ.14,281 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை - மதுரை இடையே வழக்கமான கட்டணம் ரூ.4,300, தற்போதைய கட்டணம் ரூ.17,695 என்றும்.சென்னை- திருச்சி இடையே வழக்கமான கட்டணம் ரூ.2,382, தற்போதைய கட்டணம் ரூ.14,387 என உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை- கோவை இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,485, தற்போதைய கட்டணம் ரூ.9,418 எனவும் .சென்னை - சேலம் இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,537, தற்போதைய கட்டணம் - ரூ.8,007 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை - திருவனந்தபுரம் இடையே ரூ.3,821, தற்போதைய கட்டணம் ரூ.13,306 எனவும், சென்னை- கொச்சி இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,678, தற்போதைய கட்டணம் ரூ.18,377 என்றும் .சென்னை- மைசூர் இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,432,தற்போதைய கட்டணம் ரூ.9,872 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி சென்னை - தாய்லாந்து இடையே வழக்கமான கட்டணம் - ரூ.8,891, தற்போதைய - கட்டணம் ரூ.17,437 என்றும் .சென்னை- துபாய் இடையே வழக்கமான கட்டணம் - ரூ.12,871, தற்போதைய கட்டணம் - ரூ.26,752 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் இந்த முடிவை விமான நிறுவனங்கள் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Airfares hiked manifold Passengers are shocked