ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் 5-நட்சத்திர பாதுகாப்புடன் கூடிய 5 பட்ஜெட் கார்கள் – மொத்த பேமிலியும் ஜாலியா டிரிப் போகலாம்..!
5 budget cars with 5 star safety under Rs10 lakh the whole family can go on a fun trip
கார்களை வாங்கும் முன் வாடிக்கையாளர்கள் மைலேஜ், வடிவமைப்பு மட்டுமல்ல, பாதுகாப்பும் மிக முக்கியமாக கவனிக்கின்றனர். 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட் கார்களில் கூட, பாரத் என்சிஏபி கிராஷ் சோதனைகளில் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெறும் கார்கள் உள்ளன. அந்த ஐந்து பட்ஜெட் கார்களை பார்க்கலாம்:
1. டாடா நெக்ஸான்
எஸ்யூவி பிரியர்களுக்குப் பிரபலமான நெக்ஸான், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திரம், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரம் பெற்றுள்ளது.வலுவான பாடி ஷெல் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் குடும்பங்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
2. மாருதி சுசுகி பலேனோ
மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரம், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரம் பெற்றுள்ளது.எளிதான பயன்பாடு மற்றும் விரிவான சேவை நெட்வொர்க், வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.
3. டாடா பன்ச் இவி
எலக்ட்ரிக் பிரிவில் மலிவு மற்றும் பாதுகாப்பான தேர்வு.பாரத் என்சிஏபி கிராஷ் சோதனையில் 5 நட்சத்திர பாதுகாப்பு.டூயல் ஏர்பேக்குகள், ABS, ஐசோஃபிக்ஸ், சீட் பெல்ட் ப்ரீ-டென்ஷனர்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
4. கியா சைரோஸ்
புதிய காம்பாக்ட் எஸ்யூவி, குடும்ப பாதுகாப்பிற்காக 5 நட்சத்திர மதிப்பீடு பெற்றுள்ளது.ஆறு ஏர்பேக்குகள், ESC, VSM, டயர் பிரஷர் மானிட்டரிங், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.
5. டாடா அல்ட்ராஸ்
ஹேட்ச்பேக் பிரிவில் வலுவான செயல்திறனுக்குப் பிரபலமானது.பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திரம், ஆனால் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பன்ச் மற்றும் சைரோஸ் அளவுக்கு வலுவாக இல்லை.தினசரி பயணங்களுக்கு ஸ்டைலான ஹேட்ச்பேக் தேடுபவர்களுக்கு நம்பகமான தேர்வு.
இக்கார்கள் பட்ஜெட் வரம்புக்குள் பாதுகாப்பையும் தரும் சிறந்த தேர்வுகள் ஆகும். குடும்பங்கள் மற்றும் பாதுகாப்பைக் கவனிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இதுவே சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
English Summary
5 budget cars with 5 star safety under Rs10 lakh the whole family can go on a fun trip