தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை..!
4 days tasmac closed in tamilnadu
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆயிரத்து 374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3 ஆயிரத்து 843 நகராட்சி உறுப்பினர்கள், 7 ஆயிரத்து 609 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 826 பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இன்று முதல் வரும் 19-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க தலை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான பிப்ரவரி 22ஆம் தேதி அன்று, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், அருகில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் டாஸ்மார்க் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
4 days tasmac closed in tamilnadu