அனைத்து உச்சகட்ட நிலைக்கும்., உடல் மாற்றத்திற்கும் பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்.!! - Seithipunal
Seithipunal


நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் மூலமாகவே நமது உடலானது எவ்வாறு? எப்படி? எப்போது? வளர வேண்டும் என்பதை கட்டுக்குள் கொண்டு தேவையான நேரத்தில் தனது பணியை செய்கிறது. பெண்கள் முதலில் பருவமடையும் சமயத்திற்கு முன்னதாக ஈஸ்டிரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன்கள் சுரந்து., பெண்கள் பருவமடைகின்றனர். 

பெண்கள் பருவமடைந்த பின்னரும் இந்த ஹார்மோன்களின் உதவியால் தான் ஒவ்வொரு மாதமும் பெண்கள் கருவுருதலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறது. இதன் மூலம் தான் மாதம் தோறும் சினைப்பைகள் முட்டையை வெளியிட உதவி செய்கிறது. பெண்கள் கருத்தரிப்பதற்கு இந்த ஹார்மோன்கள் அதிகளவில் உதவுகிறது. 

பெண்கள் கருத்தரித்த பின்னர் தாய்ப்பால் உற்பத்தி செய்வதற்கும்., குழந்தையை பிரசவித்த பின்னர் தாய்ப்பால் சுரப்பதற்கும் அதிகளவு உபயோகம் ஆகிறது. பெண்கள் கருத்தரித்த பின்னர் இந்த ஹார்மோன்கள் மூலமாகவே மாதவிடாயை தடை செய்து., குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 

பெண்கள் தங்களின் இனப்பெருக்க கட்டத்தை கடந்த பின்னர் மேற்கூறிய இரண்டு ஹார்மோன்களின் சுரப்பானது குறைந்து., சினைப்பைகள் கருமுட்டைகளை வெளியேற்றாமல் பாதுகாக்கிறது. இதற்கு அடுத்தகட்டமாக உடலில் கருத்தரிக்கும் வாய்ப்பு நிறைவு பெற்று., மாதவிடாய் நிற்கும். இதற்கு பின்னர் உடலின் வளர்ச்சியை பொருத்தும்., உணவு பழக்கவழக்கத்தை அடிப்படையை பொறுத்து மாதவிடாய் நிறைவு பெறுகிறது. 

பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மையை பொறுத்தே அவர்களின் காம நிலை., காம உணர்வு., உடல் எடை., உடற்சூடு., பசி மற்றும் எலும்புகளின் சக்தி ஆகிவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இவை அனைத்தையும் பெண்கள் சரியான முறையில் தெரிந்து கொண்டு., சரியான பாதையில் இதனை கடந்த வர வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the one harmon is control all activities of girls periods to end of periods


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->