மாதவிடாயை சுகாதாரமாக கடக்க என்ன செய்ய வேண்டும்?.!! சந்தேகங்கள் மற்றும் எளிமையான தீர்வுகள்.!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் சரியான சுகாதாரமானது கடைபிடிக்காத பட்சத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை போன்ற நோய்களில் சிக்கும் பிரச்சனையானது பெண்களுக்கு உள்ளது. இதன் காரணமாக மாதவிடாய் நேரத்தில் சுகாதாரத்தை கடைபிடிப்பது குறித்து இனி காண்போம். 

தற்போதுள்ள நிலைமையில் டாம்பூங்கள்., சானிட்டரி நாப்கின்கள் மற்றும் மென்சுரல் கப்கள் என்று பல விதமான முறையில் மாதவிடாய் பிரச்சனையை எளிதாக கடப்பதற்கு வாய்ப்புள்ள நிலையில்., இரத்தப்போக்கின் அளவிற்கு ஏற்றவாறு மேற்கூறிய ஒன்றில் தேர்ந்தெடுத்து செயல்படுவது சிறந்தது. இந்த முறையில் டாம்பூன்களை உபயோகம் செய்வது சில பெண்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

சில பெண்கள் நாப்கின்கள் நன்றாக இரத்தப்போக்கால் நனையாத வரை மாற்றுவதில்லை. இவ்வாறு செய்வது இரத்தப்போக்கு குறைவாக இருந்தாலும்., அதிகமாக இருந்தாலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின்களை மாற்றுவது அவசியம். உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் நாப்கின்னில் படிந்து பூஞ்சை தொற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

அவ்வாறு ஏற்படும் பூஞ்சை தொற்றானது சிறுநீரக பாதையில் தொற்று., பிறப்புறுப்பில் அலர்ஜி., பிறப்புறுப்பில் தொற்று போன்றவை ஏற்படவும் வாய்ப்புள்ளது. பள்ளி மற்றும் பணிகளுக்கு செல்லும் பெண்கள் மற்றும் பருவமடைந்த சிறுமிகள் இடைவெளி நேரத்தில் நாப்கின்களை மாற்றிக்கொள்வது அவசியம். நாப்கின்கள் முழுவதும் இரத்தத்தால் நனைந்த பின்னர் மற்றும் செயலாது தொடைப்பகுதியில் சிராய்ப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. 

இது போன்ற பிரச்சனையில் இருந்து தப்பிக்க நாப்கின்களை உலர்வாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். இதனை மீறியும் தொடையில் அரிப்புகள் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டால் ஆன்டிசெப்டிக் தழும்புகளை தடவ வேண்டும். மாதவிடாயின் சமயத்தில் இரத்த துளிகள் பிறப்புறுப்பை சுற்றிலும் சிறு துளிகளாக வழிந்து வரும் சமயத்தில் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. 

அவ்வாறு ஒட்டியிருக்கும் இரத்த துளிகளை சுத்தம் செய்யாவிட்டால் துர்நாற்றம் ஏற்படும். நாப்கின்களை மாற்றும் சமயத்தில் சுத்தமான நீரால் பிறப்புறுப்பை சுத்தம் செய்வது அவசியம். பொதுவாக பெண்களின் பிறப்புறுப்பை தன்னை தானே சுத்தப்படுத்தும் திரவமானது சுரந்து பிறப்புறுப்பை பாதுகாக்கும். இதனை தவிர்ப்பதற்கு சோப்பு நீரால் பிறப்புறுப்பை கழுவ வேண்டும் என்ற அவசியமில்லை. 

சோப்பு நீரில் இருக்கும் வேதிப்பொருளானது பாக்டீரியாவில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை அழித்துவிடும். பிறப்புறுப்பின் வெளிப்புறத்தில் மட்டுமே சோப்பை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்., பிறப்புறுப்பின் உள் பகுதியில் சாதாரண அல்லது இளம்சூடுள்ள நீரால் சுத்தம் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் பிறப்புறுப்பில் இருந்து மலவாய் வரை மேலிருந்து கீழாக துடைக்க வேண்டும். இதனை மாற்றி செய்வதன் காரணமாக மலவாய் பகுதியில் இருக்கும் கிருமிகள் பிறப்புறுப்பில் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. 

மாதவிடாயின் சமயத்தில் கட்டாயம் காலை மற்றும் மாலை வேளையில் குளிப்பது அவசியம். மாதவிடாய் நேரத்தில் உபயோகம் செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றை உபயோகம் செய்தால் அதனை மட்டுமே உபயோகம் செய்ய வேண்டும். நாளொன்றுக்கு பிற பிற தயாரிப்பு நிறுவனத்தின் நாப்கின்களை உபயோகம் செய்தால் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புள்ளது. முடிந்தவரை இயற்கை பொருளில் ஆன பருத்தி நாப்கின்களை உபயோகம் செய்வது நல்லது. 

மாதவிடாய் துவங்கும் நாட்களை சரியாக நியாபகம் வைத்து கொண்டு முன்னெச்சரிக்கையாக நாப்கின்களை கைப்பையில் வைத்திருக்க வேண்டும். மாதவிடாய் நேரத்தில் நாப்கின்களை வைத்திருப்பதன் மூலமாக பிற பிரச்சனைகளில் இருந்து எளிதாக தப்பிக்க இயலும். இதுமட்டுமல்லாது கைப்பையில் டவல் அல்லது டிசு பேப்பர்., தண்ணீர் பாட்டில்., ஆண்டிசெப்டிக் ஆயில்மெண்ட் வைத்திருப்பது அவசியம்

English Summary

how to safe cross during periods time


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal