பெண்களின் அந்த மூன்று நாட்கள்.....!!  - Seithipunal
Seithipunal


பெண்கள் பருவமடைந்த நாட்களில் இருந்து மாதத்திற்கு மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை மாதவிடாய் இயற்கையாக ஏற்படுகிறது. அவ்வாறு மாதவிடாய் நடைபெறும் நேரத்தில் இரத்தத்துடன் கருத்தரிக்க தயாராக இருந்து காலாவதியான முட்டையும் சேர்ந்து வெளியேறுகிறது. தாம்பத்தியத்தின் போது வெளியாக தயாராக இருக்கும் சினை முட்டைகள் மாதவிடாயின் சமயத்தில் வெளியேறுகிறது. இந்த தருணத்தில் கருத்தரிக்க தயாராக இருக்கும் பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் மூலமாக இரத்தமானது வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது. 

மாதம்தோறும் ஏற்படும் ஏற்படும் இரத்த போக்கை சரியாக நிகழ்த்துவதற்கு சுரப்பிகள் சரியாக சுரக்க வேண்டும் மற்றும் உடலில் இரத்த அளவானது பராமரிக்கப்பட வேண்டும். சிலருக்கு உடலில் உடலுக்கு தேவையான இரத்தம் இல்லாத காரணத்தால் இரத்த போக்கானது சரிவர நிகழாமல்., மாதவிடாய் சுழற்சியானது தள்ளிப்போகிறது. இதிலும் சிலருக்கு மாதவிடாய் நீரினை போல வெளியேறும். இது அளவுக்கு அதிகமாக இரத்தம் உடலில் இருக்கும் நபருக்கு ஏற்படும். சில சமயத்தில்., முதல் மாதத்தில் சரியாக இருந்த மாதவிடாய் மறு மாதத்தில் திட்டுத்திட்டாக வெளியேறலாம். 

இதுமட்டுமல்லாது சிலருக்கு உடலின் குளிர்ச்சி தன்மை., வெப்பம்., வேலை., குடும்பம் மற்றும் கல்வி போன்ற பல மன அழுத்தத்தாலும் மாதவிடாயானது சீரற்று நடக்கலாம். பொதுவாக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்களின் மாதவிடாயானது திட்டுத்திட்டாக வெளிப்படுதல்., வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக இடுப்பு வலி மற்றும் முட்டி வலி போன்ற பிரச்சனைகளும்., நரம்புகளின் இழுப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். இதுமட்டுமல்லாது கருப்பையில் கட்டிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று. இது கண்டிப்பாக நடந்தே தீரவேண்டும். தற்போதுள்ள இரண்டு தலைமுறைக்கு முந்தைய பெண்களுக்கு பிறந்தது முதல் இறப்பது வரை உடன் சொந்தங்கள் இருந்து தேவையான அனைத்தையும் செய்து வழங்கி வந்தனர். இதுமட்டுமல்லாது பருவமடைய துவங்கும் மாதத்தில் சீரற்ற இரத்த போக்கை தடை செய்வதற்கும்., ஈடு செய்வதற்கும் அரைவேக்காட்டில் கோழியை முட்டையுடன் சமைத்து நல்லெண்ணையை வழங்கி உண்ண 
சொல்லுவார்கள். 

இதற்கு அடுத்தபடியாக அரைத்த கருப்பு உளுந்து மாவுடன் வெல்ல தூளுடன் சேர்த்து வெண்ணீரில் கலந்து பிசைந்து களியை போல வழங்குவார்கள். இவையில் இருக்கும் ஊட்டச்சத்தின் காரணமாக உடல் நலம் பெரும். இதுமட்டுமல்லாது நல்லெண்ணெய் உளுந்தங்களி., பச்சை தானிய கதிர்களின் அவல் போன்றவையும் வழங்குவார்கள். உடலுக்கு தேவையான சத்துக்களை தேடி வழங்கி வந்த உடலின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட்டது. இந்த சமயத்தில் எந்த விதமான மன அழுத்தத்திற்கும் உள்ளாகாமல்., தங்களின் உடல் ஓய்வையும் பெற்று மகிழ்வாக இருந்து வந்தனர். 

இன்றுள்ள காலகட்ட சூழ்நிலையில் மாதவிடாய் சுழற்சியை முன்கூட்டியே நிகழ்த்துவதற்கு., நாட்களை தள்ளிபோடுவதற்கு உண்ணும் மாத்திரைகள் அனைத்தும் பிற்காலத்தில் குழந்தையை பெற்றெடுக்கும் சமயத்திலும்., கருவறுதலிலும் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தும். எந்த விதமான சூழ்நிலைக்கும் தயாராக இருக்கும் நிலையில்., இயற்கையை அதன் பாதையிலேயே விட்டுவிடுவது நல்லது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

during Menopause periods time how to ready for accept it


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal