உலகின் 8வது கண்டம்! ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு! - Seithipunal
Seithipunal


ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய ஏழு கண்டங்கள் மட்டும்தான் தற்போதுவரை நம் பூமியில் உள்ளது.

தற்போது எட்டாவதாக ஒரு கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டத்திற்கு ஜீலந்தியா என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

கடலின் அடிதளத்தில் எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி, இந்த கண்டத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். 

நியூசிலாந்துக்கு அருகே பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில், சுமார் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. 

இந்த கண்டம் எப்போது நீருக்கடியில் சென்றது? என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிவியலாளர்கள், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு உலகின் 8-வது கண்டமாக அறிவிக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்திய பெருங்கடலில் மூழ்கி இருப்பதாக சொல்லபடும் லெமூரியா கண்டம் (தமிழர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படும் கண்டம்) குறித்து இன்னும் ஒரு முடிவு எட்டப்படாத நிலையில், ஜீலந்தியா என்ற புதிய கண்டம் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World 8th Continent Zealandia


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->