திரையுலகில் சோகம்: கேரள நடிகை கனகலதா மரணம்! - Seithipunal
Seithipunal


நரம்பியல் சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த பிரபல நடிகை கனகலதா (வயது 63) காலமானார். கேரளா, கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த நடிகை கனகலதா சிறுவயதிலிருந்தே திரைப்படத்துறைக்கு வந்து ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். 

250க்கும் மேற்பட்ட மலையாள படங்கள், 12 தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் கனகலதா நடித்துள்ளார். 

கடந்த 2021 ஆம் ஆண்டில் நரம்பியல் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்து தொடர் சிகிச்சை பெற்று படுக்கையாக இருந்து வந்தார். 

இந்நிலையில் நடிகை கனகலதா நோய் பாதிப்பு காரணமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று உயிரிழந்து விட்டார். அவரது உடலுக்கு மலையாள திரையுலக நடிகர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala actress Kanakalatha dies


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->