என்னது "வீடு வாங்கினால் மனைவி இலவசமா"? - சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்..! - Seithipunal
Seithipunal


சீனா நாட்டின் தியான்ஜின் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் “வீடு வாங்குங்கள், மனைவியை இலவசமாகப் பெறுங்கள்” என்ற விளம்பரத்தை ஒளிபரப்பு செய்தது. இந்த நடவடிக்கை மக்களிடம் தங்கள் நிறுவனத்தை எடுத்துச் செல்ல உதவும் என்றும் இது வீடுகளின் விற்பனையை பூஸ்ட் செய்யும் என்றும் கருதி எடுக்கப்பட்டது. 

இந்த விளம்பரம் சீனாவில் வைரலானாலும் பொதுமக்கள் இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் குறிப்பாகப் பெண்கள் இந்த விளம்பரத்தை மிகக் கடுமையாகச் சாடினர். மேலும், பெண்களை எதோ பரிசு பொருட்களைப் போலக் காட்டும் இந்த விளம்பரத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இந்த சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்நாட்டின் ரியல் எஸ்டேட் கண்காணிப்பு அமைப்பு விசாரணையில் இறங்கியது. அப்போது, அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் தங்கள் விளம்பரத்தைப் பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொண்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.

அதாவது, ஒரு வீட்டை வாங்கி, அதை உங்கள் மனைவிக்குக் கொடுங்கள் என்பதே தங்கள் விளம்பரம் என்றும் அதை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதாகவும் விளக்கம் அளித்தனர். இருப்பினும், அந்த நிறுவனத்திற்கு சீன கண்காணிப்பு அமைப்பு 3 லட்சம் அபராதம் விதித்த விளம்பரத்தை உடனடியாக நிறுத்தவும் அறிவுறுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife free for buy house addvertiesment viral in china


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->