நோயாக மாறி பரவி வரும் செல்பி மோகம், அதுக்காக இப்படியா? கடும் எதிர்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


மாடல் அழகி ஒருவர் இறந்த தந்தையின் உடல் முன்பு செல்பி எடுத்து, அதனை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்காலத்தில் செல்பி எடுப்பது ஒரு நாகரிகமாக மாறி வருகிறது.எங்கு எதை பார்த்தாலும் செல்பி என அது ஒரு நோயை போல பரவி வருகிறது .மேலும் இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

model sparks outrage by posting pouting selfies with the corpses க்கான பட முடிவு
 
இந்நிலையில் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர் ஜெலிகா லூபியிக்  என்ற இன்ஸ்டாகிராம் மாடல் அழகி, மருத்துவமனையில் இறந்த கிடந்த தனது தந்தையின் உடல் முன்பு செல்பி எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில், எங்களால் முடிந்த வரை உங்களை காப்பாற்ற முயற்சி செய்தோம். ஆனால் நம் கையில் எதுவும் இல்லை,எனவே அவர் உயிரிழந்துள்ளார்.  ஒரு மகளாக என்னை நல்வழியில் நடத்தியதற்கு நன்றி ,உங்களது ஆன்மா சாந்தியடைய நாங்கள் பிராத்திக்கிறோம். நீங்கள் எப்பொழுதும் எங்களுடைய இதயத்தில் இருப்பீர்கள் என பதிவிட்டிருந்தார். 

model sparks outrage by posting pouting selfies with the corpses க்கான பட முடிவு

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மனநோயாளி மட்டுமே இதை போன்ற  செயலை செய்வார்கள் என அவரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து உடனடியாக நீக்கியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

model sparks outrage by posting selfies with the corpses of her father


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->