இராணுவத்தினர் போன்று பேருந்துகளை சோதித்து., 14 பயணிகளை கொடூரமாக கொலை செய்த கும்பல்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகில் தனக்கென ஒரு கொள்கையை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரவாதிகளின் ஆதிக்கமானது அதிகரித்துக் கொண்டே வருகிறது., இதனை தடுப்பதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கம் இராணுவத்தினர் மூலமாக பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இராணுவத்தினர் என்னதான் விழிப்புடன் இருந்தாலும்., சில நேரங்களில் எல்லை மீறிய தாக்குதல்களும்., அத்துமீறல்களும் நடைபெற்று பல மக்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பாலுசிஸ்தான் மாகாணத்தில் தற்போது இது போன்ற கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பாலுசிஸ்தான் மாகாணமானது பயங்கரவாத தாக்குதல் மற்றும் வன்முறையால் கடுமையான பாதிக்கப்பட்ட மாகாணமாகும்., இந்த மாகாணத்தில் பயங்கரவாதிகள் அடிக்கடி பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது., ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று கராச்சி நகர் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகளை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளது. அந்த சாலையில் அந்த பேருந்து ஒன்றை சோதனை செய்த கும்பல்., பேருந்தை நிறுத்தி பேருந்தில் பயணித்த பயணிகள் அடையாள அட்டையை காண்பிக்க கூறியுள்ளது. 

இதற்கு பின்னர் அந்த பேருந்தில் பயணித்த சுமார் 16 பயணிகளை கீழே இறக்கி தனியாக அழைத்துச் சென்று துப்பாக்கியால் நொடிப்பொழுதில் சரமாரியாக எந்தவிதமான ஈவு இறக்கமின்றி சுட்டுத்தள்ளினர்., இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு நபர்கள் குண்டடிபட்ட நிலையில் அங்கிருந்து தப்பி ஓடி அருகில் உள்ள சோதனை சாவடிக்கு சென்று சம்பவ இடத்தில் நடந்தவற்றை குறிப்பிட்டுள்ளனர். 

இதனை அடுத்து அங்கிருந்து அவர்கள் இருவரையும் மீட்டு ராணுவத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர்., சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் யாரும் இல்லாத நிலையில் இறந்தவர்களின் உடல்கள் அருகில் இருந்த ஒரு ஓட்டலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

இந்த கொடூரத்தை அரங்கேற்றிய கும்பல் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காத நிலையில் அவர்கள் குறித்த தகவல்களை தேடி வருகின்றனர். இது குறித்து தற்போது வரை எந்தவித பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்., பயங்கரவாதிகள் பேருந்தை சோதனை செய்த நிலையில்., 16 பயணிகளை மட்டும் ஏன் தனியாக அழைத்து சென்று கொலை செய்தனர் என்ற தகவலை கண்டறிய தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Pakistan terrorist attack on passengers 14 peoples died investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->